சிறுவர்கள் சேற்றில் புரள்வதற்கு வசதி செய்து கொடுத்த அதிபர்; பெற்றோர்களுக்கான படிப்பினை

🕔 November 3, 2017

மாணவர்களை அவர்களின் விருப்பம் போல் சேற்றினுள் புரண்டு விளையாடுவதற்கு, அதிபரொருவர் அனுமதித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

மாணவர்களின் இந்த விருப்பதற்தினை நிறைவேற்றுவதற்காக விசேடமாக தயார்படுத்தப்பட்ட சேறு, அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.

ஹொரன பிரதேசத்திலுள்ள குருகொட கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் அஜித் பிரேமகுமார, தனது பாடசாலை மாணவர்களுக்கு இந்த அரிய சந்தர்ப்பத்தினை உருவாக்கிக் கொடுத்திருந்தார்.

சர்வதேச சிறுவர் தினத்தினையொட்டி, மாணவர்களின் உள்ளக் கிடக்கைகளை வெளிப்படுத்தும் வகையில், இந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது.

சிறுவர்களை அவர்களின் விருப்பங்களுக்கேற்ப வாழ விடுவதிலேயே, அவர்கள் பெரிதும் மகிழ்ச்சி கொள்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்