உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏதுவான வர்த்தமானி அறிவித்தல், புதன்கிழமை வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா

🕔 October 27, 2017

– அஹமட் –

ள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் புதன்கிழமை (நொவம்பர் 01ஆம் திகதி) வெளியிடவுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.

ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களிலும் அமையவுள்ள வட்டாரங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றுக்கான அபேட்சகர்களின் தொகை தொடர்பிலான தகவல்களைக் அறிவிக்கும் வகையில் மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

இலங்கையில் முதன் முறையாக, கலப்புத் தேர்தல் முறைமையின் கீழ் உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 07ஆம் திகதிக்கு முன்னதாக மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமாயின், ஜனவரி மாதத்துக்குள் தேர்தலை நடத்த முடிவும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்