ஆங்கிலப் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த ஊடகவியலாளர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஊடகவியலாளர்களுக்கான மூன்று மாதகால ஆங்கில பயிற்சி நெறியை பூர்த்தி செய்து, சிறப்பாக பரீட்சையில் பங்குபற்றிய ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய் கிழமை கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மேற்படி ஆங்கில பயிற்சி நெறி, அமெரிக்க தூதரகத்தின் அனுசரணையில் இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.
இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனத்தின் தவிசாளர் குமார் நடேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் ஊடக, கலாச்சார பணிப்பாளர் ஜின் றூசோ கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இப் பயிற்சி நெறியில் ஊடகவியலாளர்கள்கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

