அமைச்சர் ஒருவரைப் பராமரிக்க ஆண்டொன்றுக்கு 700 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது: ஜே.வி.பி. செயலாளர்

🕔 October 25, 2017

மைச்சர் ஒருவரைப் பராமரிப்பதற்காக ஆண்டு ஒன்றுக்கு 700 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக, ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மக்களின் பணம்தான் இவ்வாறு செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, உண்மையான மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காக மக்களை அணி திரட்டும் கிராமிய மட்டத்திலான திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

“கிராமிய மட்டத்தில் மக்களுக்கு இவை தொடர்பில் தெளிவூட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் ஆட்சியாளர்கள் வரப்பிரசாதங்களை அனுபவித்து வருகின்றனர்” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்