ஜனவரி 27இல் உள்ளுராட்சித் தேர்தல்: அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு

🕔 October 24, 2017

– அஹமட் –

ள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலொன்று, அடுத்த வாரம் வெளியிடப்படும் என, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் சில மணி நேரத்துக்கு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் தேர்தல்களை நடத்தாமல் ஒத்தி வைத்து வருகின்றமை தொடர்பில், பல மட்டங்களிலிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள பொறுப்புவாய்ந்த அமைச்சர் மனோ கணேசன், தனது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறானதொரு தகவலை பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்