புதிது வெளியிட்ட வீடியோ; 48 லட்சம் பேர் பார்வையிட்டதன் மூலம் சாதனை

🕔 October 22, 2017

புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றினை 18 நாட்களில் சுமார் 48 லட்சம் பேர் பார்வையிட்டதன் மூலம் மாபெரும் சாதனையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

06 நிமிடங்களில் 120 பிரபலங்களின் குரல்களில் ஒருவர் பேசி சாதனை படைத்த வீடியோ ஒன்றினை, கடந்த 04ஆம் திகதி புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம்.

குறித்த வீடியோவினை 18 நாட்கள் கடந்துள்ள நிலையில் 47,75,944 பேர் பார்வையிட்டுள்ளதோடு, 50,976 பேர் பகிர்ந்துள்ளனர். மேலும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவினை ‘லைக்’ செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், 18 நாட்களில் ஒரு செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றினை சுமார் 48 லட்சம் பேர் பார்வையிட்டிருப்பது மிகப் பெரும் சாதனையாகும்.

உண்மையில் இது ஆச்சரியமானதொரு விடயமாகவும் உள்ளது.

இந்த ஆச்சரியம் கலந்த சாதனைக்கு ‘புதிது’ வாசகர்கள்தான் சொந்தக்காரர்கள் என்பதை சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்

வீடியோவை பார்வையிடுவதற்கு: https://www.facebook.com/puthithunews/videos/1439988026098152/

Comments

புதிது பேஸ்புக் பக்கம்