ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சாட்சியமளித்தவருக்கு மரண அச்சுறுத்தல்; நாட்டை விட்டு வெளியேறினார்

🕔 October 17, 2017

பிணை முறிகள் விவகாரத்தில் சாட்சியமளித்த அனிகா விஜேசூரிய நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் உறவினர் ஒருவர், அனிகாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமையினாலேயே, அவர் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

சொத்துக்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் அனிகா விஜேசூரிய பணிப்பாளராகக் கடமையாற்றுகின்றார்.

சுமார் 116 லட்சம் ரூபாவுக்கு வீடொன்றினை வாடகைக்குப் பெற்று, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கியதாக, பிணை முறிகள் விவகாரத்தினை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் அனிகா சாட்சியமளித்திருந்தார்.

இதனையடுத்து, அனிகாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக, பிணை முறிகள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அனிகாவின் சகோதரர் விஜித் என்பவருக்கும், மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசாரிக்குமாறு, ஆணைக்குழுவிடம் சட்ட மா அதிபர் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்