உள்ளுராட்சித் தேர்தல்; உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், திங்கள் கையொப்பமிடப்படும்

🕔 October 14, 2017

புதிய சட்டத்தின் கீழ் உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையினை தெரியப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

புதிய சட்டத்தின் கீழ் உள்ளுராட்சி சபைகளுக்கு வட்டார முறைமையின் அடிப்படையில் 60 வீதமான உறுப்பினர்களும், விகிதாசார முறைமையின் கீழ் 40 வீதமான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“எதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய்கிழமையளவில், இதற்கான வர்த்தமானியில் கையொப்பமிடப்படும்” எனத் தெரிவித்த அமைச்சர்; அதன் பின்னர், உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கான தயார்படுத்தல் வேலைகளை, தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளும் என்றும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்