லிற்ரோ கேஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நிசங்க நாணயகார நியமனம்

🕔 October 13, 2017

லிற்ரோ கேஸ் லங்கா லிமிட்டட் நிறுவனத்தின் புதிய தலைவராக நிசங்க நாணயகார நியமிக்கப்பட்டுள்ளார் என்று, அரசாங்க தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

லிற்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவராகப் பதவி வகித்த ஷலில முனசிங்க, தாய்வான் வங்கியிக் கணக்கிலிருந்து 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை, மோசடியாகப் பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரை – தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக லிற்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

இதனையடுத்தே, அந்த நிறுவனத்தின் புதிய தலைவராக நிசங்க நாணயகார நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்