காரின் ஜன்னலுக்கு வெளியே, மேலாடையின்றி தொங்கிய பெண், விளக்குக் கம்பத்தில் மோதி பலி

🕔 October 12, 2017

டிக் கொண்டிருந்த கார் ஒன்றின் கண்ணாடிக்கு வெளியே, மேலாடையின்றி உடம்பைத் தொங்கவிட்டவாறு பயணித்த ரஷ்ய நாட்டு பெண் ஒருவர், வீதி மின் விளக்குக் கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் டொமினிக்கன் குடியரசில் இடம்பெற்றுள்ளது.

டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா வந்திருந்த ரஷ்யா – மொஸ்கோவைச் சேர்ந்த நட்டாலியா பொரிஸோவ்னா பொரோடினா எனும் 34 வயதுடைய பெண் ஒருவர், தனது நண்பி காரினை செலுத்த, தனது மேலாடையினை அகற்றி விட்டு, பயணிகள் பக்கமுள்ள கண்ணாடி வழியாக தொங்கிக் கொண்டு வந்தார்.

இவர் இவ்வாறு பயணித்ததை, காரினை ஓட்டிக் கொண்டிருந்த அவரின் நண்பியான 32 வயதுடைய இவானா என்பவர், தனது தொலைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போதே, குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

எவ்வாறாயினும், விபத்துக்குள்ளான நட்டாலியாவை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதும், அவர் கடுமையான காயங்கள் காரணமாக இறந்து விட்டதாக, வைத்தியர்கள் அறிவித்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விளையாட்டாக அந்தப் பெண் செய்த காரியம், அவரின் உயிரையே இறுதியில் பலியெடுத்து விட்டதாகவும் ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் பலியான நட்டாலியா, ஒரு குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்