அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரஸில் இணைந்தார்

🕔 October 10, 2017

– எம்.வை. அமீர் –

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கடந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டவரும் சிம்ஸ் கல்வி நிறுவனத்தின் தலைவருமான அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரஸில் இணைந்துகொண்டார்.

கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் முன்னிலையில், கல்முனை அல் – றூபி ஹோட்டேல் கேட்போர்  கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து, தேசிய காங்கிரசில் இணைந்து கொண்டமையினை அன்வர் முஸ்தபா உறுதிப்படுத்தினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்குமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய கொள்கைபரப்புச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான  முகம்மட் எம்.எம். பஹீஜ், கிழக்கு மாகாண கொள்கைபரப்புச் செயலாள அகமட் புர்கான் மற்றும் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்