போராட்டம் தொடரும்; அரசாங்கத்துக்கு நாமல் அச்சுறுத்தல்

🕔 October 9, 2017

நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிரான போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத்தள விமான நிலையம் உட்பட நாட்டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி, ஹம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்யப்பட்டது.

இதன் போது 28பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 16ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டிய நாளுமன்ற உறுப்பினர் நாமல்; உண்மையை மறைக்கும் அரசாங்க தரப்பினரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கப் போவதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்