சர்வதேச ஊடகங்களையே வியப்பில் ஆழ்த்தும் வகையில், புதிது சாதனை

🕔 October 5, 2017

புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றினை, ஒரு நாளில் (24 மணித்தியாலங்களில்) சுமார் 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இது, மிகப் பெரியளவிலான சர்வதேச ஊடகங்களுக்கு கிடைக்கும் பார்வையாளர் எண்ணிக்கைக்கு நிகரானதாகும்.

நேற்று புதன்கிழமை இரவு சரியாக 09.32 மணிக்கு பதிவேற்றப்பட்ட குறித்த வீடியோவை, ஒருநாள் நிறைவில் 977,364 பேர் பார்வையிட்டுள்ளனர்.

06 நிமிடங்களில் 120 பிரயல்யங்களின் குரலில் – தமிழில் பேசி சாதனை படைத்த ஒருவரின் வீடியோவொன்றினை, புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தோம்.

இந்த வீடியோவை 14 மணித்தியாலங்களில் 139,146 பேர் பார்வையிட்டிருந்தனர். இதுவே மிகப் பெரியதொரு சாதனையாகும். இது குறித்து புதிது செய்தித்தளத்தில் இன்று காலை, நாம் செய்தியொன்றினை வழங்கியிருந்தோம்.

இந்த நிலையில்தான், தற்போது ஒரு நாள் நிறைவில் குறித்த வீடியோவை சுமார் 01 மில்லியன் (10 லட்சம்) பேர் பார்வையிட்டு, சர்வதேச ஊடகங்களையே வியப்பில் ஆழ்த்தும் வகையிலான சாதனையொன்றினை புதிது வாசகர்கள் ஏற்படுத்தியிருக்கின்றனர்.

புதிது செய்தித் தளம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளை மட்டுமே கடந்துள்ள நிலையில், அது எட்டியுள்ள இந்த மிகப்பெரும் சாதனையினை, அதன் வாசகர்களுக்கு நாம் சமர்ப்பிக்கின்றோம்.

வீடியோவை பார்ப்பதற்கு: https://www.facebook.com/puthithunews/videos/1439988026098152/

Comments

புதிது பேஸ்புக் பக்கம்