நாமல், சானக ஆகியோருக்கு நீதிமன்றம் தடை விதிப்பு

🕔 October 5, 2017

ம்பாந்தோட்ட நீதிமன்ற அதிகார எல்லைக்குள் ஆர்ப்பாட்டம் அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் டி.வி. சானக ஆகியோருக்கு ஹம்பாந்தோட்ட நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தடை விதித்துள்ளது.

இதனடிப்படையில், குறித்த எல்லைக்குள் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்தல், இந்திய துணைத் தூதரகம், மாகம்புர துறைமுகம் உள்ளிட்ட பிரசித்தமான இடங்களில், இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளல் மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் வகையில் செயற்படுதல் ஆகிய செயற்பாடுகளுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மாகம்புர துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையிலேயே நீதிமன்றம் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்