தொடரும் சாதனை; புதிது வெளியிட்ட வீடியோவை, 14 மணித்தியாலங்களில் 139,146 பேர் பார்த்து சாதனை

🕔 October 5, 2017

புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்றினை, 14 மணித்தியாலங்களில் 01 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பார்த்து, மாபெரும் சாதனையொன்றினைப் பதிவு செய்துள்ளனர்.

06 நிதிடங்கள் 120 பிரபலங்களின் குரலில் பேசி சாதனை படைத்த ஒருவரின் வீடியோ பதிவொன்றினை நேற்று புதன்கிழமை இரவு, புதிது செய்தித் தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் நாம் பதிவிட்டிருந்தோம்.

இந்த நிலையில், 14 மணித்தியாலங்கள் கடந்த நிலையில், அந்த வீடியோவினை 139,146 பேர் பார்வையிட்டுள்ளனர். இது புதிது செய்தித்தளத்தின் மிகப்பொரும் அடைவாகும்.

இதனை இன்னும் இலகுவாக விளங்குக் கொள்வதாயின் 01 மணித்தியாலத்துக்கு, சுமார் 10ஆயிரம் பேர் எனும் கணக்கில் இந்தப் பதிவு பார்வையிடப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை மாதம் புதிது செய்தித் தளத்தில் பதிவிட்டிருந்த செய்தியொன்றினை 24 மணித்தியாலங்களில் 01 லட்சத்து 07ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டிருந்தனர். அந்த சாதனையை நாம் தனியானதொரு செய்தியாகப் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், புதிது செய்தித்தளத்துடன் அதிகமான வாசகர்கள் இணைந்திருப்பதும், அவர்கள் புதிது செய்தித்தளத்தின் பதிவுகளை ஆர்வமுடன் அவதானிப்பதுமே இந்த சாதனைகள் நிகழ்வதற்கு பிரதான காரணமாகும்.

அந்தவகையில், புதிது வாசகர்களுக்கு இந்த இடத்தில் நமது இறுக்கமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிது செய்தித்தளத்தின் பதிவுகளை உங்கள் பேஸ்புக் பங்கங்களிலும் பகிர்ந்து, நமது தளத்தினை இன்னும் வளச்சியடையச் செய்யுமாறு, அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்