அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட நால்வருக்கு, வெளிநாடு செல்லத் தடை

🕔 October 2, 2017

த்திய வங்கி பிணை முறி விவகாரத்துடன் தொடர்புபட்ட பெர்ப்பச்சுவல் பங்கு தரகு நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன உள்ளிட்ட 04 பேருக்கு, வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டே நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று திங்கட்கிழமை பிறப்பித்துள்ளது.

மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில் மோசடி செய்து பல்லாயிரம் கோடி ரூபாய்களை சம்பாதித்தமை தொடர்பில், பெர்ப்பச்சுவல் பங்கு தரகு நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின்  பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன உள்ளிட்டவர்களிடம் விசாரணை இடம்பெற்று வரும் நிலையிலேயே, இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்