டயலொக் சேவை, நாடு முழுவதும் தடை

🕔 September 20, 2017

லங்கையின் தொலைத் தொடர்பு வழங்குநரான டயலொக் சேவைய, இன்று புதன்கிழமை பிற்பகலளவில் நாடு முழுவதும் தடைப்பட்டிருந்தது.

இந்த நிலை சில மணி நேரங்கள் நீடித்திருந்தமையினால், வாடிக்கையாளர்கள் பாரியளவில் பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.

இதேவேளை, தமது சேவை தடைப்பட்டிருந்ததாக டயலொக் நிறுவன வாடிக்கையாளர் சேவையும் ஒப்புக் கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது டயலொக் சேவை பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.

வாடிக்கையாளர்களின் தகவல்களின் படி, 4ஜி சேவைகள் இயங்கியதாகவும், 3ஜி சேவைகளே இவ்வாறு தடைப்பட்டிருந்ததாகவும் அறிய முடிகிறது.

இலங்கையில் 11 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள டயலொக் நிறுவனம், நாடு முழுவதும் 2600 நிலையங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்