பேஸ்புக்கில் பிரித்து மேயப்படும், ஹக்கீம் கலந்து கொண்ட அக்கரைப்பற்று பொதுக் கூட்டம்

🕔 September 16, 2017

மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், அக்கரைப்பற்றில் நேற்று வெள்ளிக்கிழமை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்ததோடு, இறுதியாக பொதுக் கூட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் தலைமையில் நடைபெற்ற மேற்படி ஒட்டு மொத்த நிகழ்வுகளும்கும் ‘மரம் வளர்ந்த மண்’ என, ஏற்பாட்டாளர்கள் பெயரிட்டிருந்தனர்.

இந்த நிலையில், அக்கரைப்பற்றில் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும், தோல்வியில் முடிவடைந்தன என்று விமர்சிக்கப்படுகின்றது. குறிப்பாக ஹக்கீம் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் பற்றி , சமூக வலைத் தளங்களில், சகோதரர்கள் பிரித்து மேய்ந்த கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில், இத்ரீஸ் சீனி முகம்மட் என்பவர், ஹக்கீம் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் பற்றி பேஸ்புக்கில் எழுதியிருக்கும் பதிவொன்றினை இங்கு வழங்குகின்றோம்.

முகாவின் அக்கரைப்பற்றுக் கூட்டம்: சிறு பார்வை

அக்கரைப்பற்று, ‘மரம் வளர்ந்த மண்’ என்று ஏ.எல். தவம் பதாகை அடித்திருந்தார்.
ஆனால் அக்கரைப்பற்று, ‘மரம் வளர்த்த மண்’ என்கிற வரலாற்று உண்மையை ஒளிவு மறைவின்றி ரவூப் ஹக்கீம் பேசியிருந்தார்.

வேதாந்தி சேகு இஸ்ஸதீனுக்கே முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, என்றும் நன்றி செலுத்த வேண்டும். அவர்தான் அதாவுல்லாவுக்கு எம்.பி. பதவி கிடைக்க காரணமானவர். நான்தான் முதலில் அவருக்கு கையொப்பமிட்டவன் – ரவூப் ஹக்கீம்

முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியின் கதவு என்றும் எல்லோருக்கும் திறந்திருக்கின்றது. கட்சிக்குள் வருபவர்களை கட்சியில் இருப்பவர்கள் யாரும் தடுக்க முடியாது. அவர்கள் தொடர்பான இறுதி முடிவு தலைவரினால் தான் எடுக்கப்படும் – ரவூப் ஹக்கீம் (கட்சித் தவிசாளர் பதிவியிலும் திடீர் மாற்றம் ஏற்படவுள்ளது என்பதனை அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் வைத்து புடம் சூசகமாகப் பேசியுள்ளார்)

“வேறு கட்சிகளிலிருந்து முகாவுக்கு வருபவர்கள் ‘மவ்லா இஸ்லாம் போன்றவர்கள்’ என்ற அடிப்படையில் கட்சிக்குள் பார்க்கப்படுகின்றது” என்று ஹக்கீம் பேசிக் கொண்டு திரும்பும் போது முன்னால் இருந்தவர் சகோதரர் தவம்தான். உடனே சுதாகரித்துக் கொண்ட அவர் “மவ்லா இஸ்லாம் என்று நான் தரக்குறைவாக சொல்லவில்லை. கட்சியில் உள்ளவர்கள் அவர்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்றார்.

எல்லோரிடமும் பலயீனங்கள் உள்ளன – ரவூப் ஹக்கீம்

வரலாற்றில் என்றும் இல்லாதவாறு அரசாங்கத்தில் மு.கா. முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது – ரவூப் ஹக்கீம்

மாகாண சபை உறுப்பினர் தவம், நான் அழைத்த போதெல்லாம் உடனே வெளியூர்களுக்கு தனது சொந்த செலவில் வந்து பிரச்சாரம் செய்தார். அவர் பிரச்சாரப் பீரங்கி. தலைவர் சொல்லும் இடங்களுக்கு எல்லாம் வந்து பேசக்கூடியவர் என்று ஹக்கீம் சொன்னார்.

இதன் மறுதலையானது மாகாண சபை உறுப்பினர் தவத்தினால் 300 பேரையாவது கூட்டி அரசியல் கூட்டம் நடத்த முடியாமல் போய்விட்டது. உங்களால் அரசியல் செய்ய இயலாது. நீங்கள் பேசுவதற்கே லாயக்கானவர் என்பதாகவே அமைந்ததாகவும் அதாவுல்லாவின் அட்டாளைச்சேனைக் கூட்டத்துக்கு வந்த எண்ணிக்கையானவர்கள் கூட, இக்கூட்டத்திற்கு வரவில்லை எனவும் அவ்விடத்தில் நின்றவர்கள் பேசிக் கொண்டார்கள்.

சகோதரர் தவம் அமைத்த மேடையில் தவத்தைப் பற்றி அதிகம் பேசாத ரவூப் ஹக்கீம், ஹனீபா மதனி மற்றும் டெஸ்கா பற்றி அதிகம் பேசியமை வியப்பாக இருந்தது.

பொய்

அம்பாறை மாவட்டத்தின் காணிகள், வன வள திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டமைக்கு சகோதரர் அதாவுல்லாஹ்தான் காரணம். அவர் தான் 2006, 2010ம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்தார். அவர் மௌனமாக இருந்தமையினால் தான் இந்த நிலமை ஏற்பட்டது என்றார் ஹக்கீம்.

அப்படியென்றால் 2010ம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசில் நீதி அமைச்சராக இருந்தவர் யார்?

அக்கரைப்பற்று முகா கூட்டம் 

மொத்தம் 400 பேர் பங்கேற்பு
# முகா அரசியல் பிரதிநிதிகளின் பட்டாளம் – 100 பேர்
# அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் சகோதரர்கள் – 100 பேர்
# சகோதரர் தவத்தின் ஆதரவாளர்கள் – 50 பேர்
# முன்னாள் அமைச்சர் சகோதரர் அதாவுல்லாவின் ஆதரவாளர்கள் – 50 பேர்
# அலையும் வாக்காளர்கள் 40 பேர்
# பாதுகாப்புத் தரப்பினர் – 40 பேர்
# பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் – 18 பேர்
# ஆலையடிவேம்பிலிருந்து அபிவிருத்தி மழையைக் காணவந்த குமார் அண்ணனும், பரந்தாமனும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்