சரத் பொன்சேகாவின் துரோகத்தனத்துக்காக, அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்: விமல் வீரவங்ச

🕔 September 3, 2017

மைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்று, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கோரிக்கை  விடுத்துள்ளார்.

முன்னாள் ராணுவத் தளவபதி ஜகத் ஜயசூரிய மீது துரோகத்தனமான குற்றச்சாட்டினை சுமத்தி அறிக்கை விட்டமைக்காகவே, சரத் பொன்சேகாவை அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென விமல் கூறியுள்ளார்.

ஊடகவிலயாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார்.

அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பினை மீறி செயற்பட்டார் எனும் குற்றச்சாட்டில், விஜேதாஸ ராஜபக்ஷவை அவரின் அமைச்சுப் பொறுப்பிலிருந்து நீக்கியமை போன்று, சரத் பொன்சேகாவையும் நீக்க வேண்டும் எனவும் விமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ராணுத்தளபதி ஜகத் ஜயசூரிய மீது ஏதாவது குற்றச்சாட்டுகள் இருக்குமானால், அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸில் சரத் பொன்சேகா முறைப்பாடு செய்திருக்க வேண்டும் எனவும் விமல் குறிப்பிட்டார்.

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் ஜகத் ஜயசூரிய – வவுனியா கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய காலத்திலும், பின்னர் ராணுவத் தளபதியாக நியமிக்க பட்ட போதும், அவர் பல்வேறு குற்றங்களைப் புரிந்ததாக நேற்று முன்தினம் அமைச்சர் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியிருந்தார்.

எனவே, ஜகத் ஜயசூரிய தொடர்பில் போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்றால், அவருக்கு எதிராக சாட்சியங்களை வழங்குவதற்கு – தான் தயாராக உள்ளதாகவும் சரத் பொன்சேகா கூறியிருந்தார்.

இவ்வாறு கூறியமைக்காகவே, அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென விமல் வீரவங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்