ட்ரம்ப் பதிவிட்ட ஒரேயொரு ட்விட்டர் செய்தியால், அமேசன் நிறுவனத்துக்கு 87,380 கோடி ரூபாய் இழப்பு

🕔 August 18, 2017

மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்ட ஒரு தகவலின் காரணமாக, அமேசான் நிறுவனத்துக்கு 5.7 பில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 87ஆயிரத்து 380 கோடி ரூபாய்) இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஒன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான்; அமெரிக்காவில் தொடர்ந்து ஒன்லைன் விற்பனையில் முன்னிலை வகித்து வருகிறது. அதுமட்டுமின்றி, 2017ஆம் ஆண்டின் உலகப் பணக்காரர்கள் வரிசையில் மைக்ரோ சொஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உடன் போட்டி போடும் அளவுக்கு பங்கு சந்தையில் முதலீடு செய்து, அமேசான் நிறுவனம் முன்னேறியுள்ளது. பெரும் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்; நேற்று முன்தினம் புதன்கிழமை ட்விட்டரில் பதிவிட்ட ஒரு தகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‘அமேசான் நிறுவனத்தால் வரி செலுத்தும் சிறு, குறு வர்த்தக நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களின் வியாபாரத்தை அதேசான் நிறுவனம் முடக்கியுள்ளது. வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன் வேலைவாய்ப்புகளையும் பலர் இழந்துள்ளனர்’ என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ட்ரம்பின் ட்வீட் வெளியான இரண்டு மணி நேரத்தில், அமேசான் நிறுவனத்தின் 5.7 பில்லியன் டொலர் மதிப்புள்ள பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்