மர்ஹும் சதக்கத்துல்லாஹ்வின் 20 கோடி ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட, பொத்துவில் ஜும்ஆ பள்ளிவாசல் திறந்து வைப்பு

🕔 August 11, 2017
– யூ.எல்.எம். றியாஸ் –

பொத்துவில் பிரதேசத்தில் தனவந்தர் ஒருவரின் சொந்த நிதியில் நிர்மாணிக்கப்பட்ட ஜும்மா பள்ளிவாசல் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பொத்துவிலை பிறப்பிடமாகவும்  எஹலியக்கொடயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மர்ஹூம் எம்.ஆர்.எம். சதக்கத்துல்லாஹ் என்பவர் வழங்கிய 20 கோடி ரூபாய் நிதியின் மூலம்   இப்பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது.

இரண்டு மாடிகளைக் கொண்ட  புதிய ஜும்மா பள்ளிவாசலில் சுமார் 5000 பேர்வரையில் தொழுவதற்கான இடவசதி உள்ளது.

இப் பள்ளிவாசல் திறப்புவிழா நிகழ்வின் முதல் ஜும்மா பிரசங்கத்தை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உப தலைவர் அஷ –  சேஹ்  யூசுப் ஹனீபா  (முப்தி) நிகழ்த்தினார்.

பள்ளிவாசல் திறப்பு விழா வைபவத்தில் நாட்டின் தலை சிறந்த உலமாக்களின் சிறப்பு பயான் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மேலும் இன்றைய நிகழ்வில் நீர்ப்பாசன அமைச்சர் விஜயமுனி சொய்சா கலந்துகொண்டு  விசேட உரையாற்றினார்.

பள்ளிவாசல் திறப்பு விழாவில், ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ், பிரதிஅமைச்சர்களான எஸ்.எஸ். அமீர் அலி, பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார  அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், உலமாக்கள், மற்றும் கல்வியலாளர்கள் உட்பட  பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்