ரவி – ஜனாதிபதி, மூடிய அறைக்குள் சந்திப்பு

🕔 August 9, 2017

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று புதன்கிழமை, மூடிய அறைக்குள் சந்தித்துப் பேசியதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடந்து முடிந்த பின்னர், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் நழுவிக் கொண்ட அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதியை பிரத்தியேகமாகச் சந்தித்து தனது பிரச்சினை தொடர்பில் பேசியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை ரகசியமாக வைத்துக் கொள்வதென, இரண்டு தரப்பினரும் பொருந்திக் கொண்டதாக, ஜனாதிபதிக்கு நெருக்கமான தரப்பு தெரிவித்துள்ளது.

பிணை முறி விவகாரம் தொடர்பில் நடைபெற்று வரும் விசாரணைகள் முடிவடையும் வரை, அமைச்சர் பதவியிலிருந்து ரவி விலக வேண்டுமென, பல தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விசாரணைகள் முடியும் வரையில், அமைச்சர் பதவியை ராஜினாநாமா செய்யுமாறு, ரவி கருணாநாக்கவை கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியும் கோரியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்