நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்; ஏழைகளை இன்னும் வதைக்கப் போகிறார் ஹக்கீம்

🕔 August 9, 2017

நீருக்கான கட்டணம் அதிகரிக்கப்படும் என்று நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஐந்து வருடங்களாக நீர் கட்டணத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீர்க் கட்டணங்கள் 03 வருடங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட வேண்டும். ஆனால் 05 வருடங்கள் ஆகியும் இன்னும் திருத்தப்படவில்லை. இதனால் விரைவில் நீர்க் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்

தற்போது வறட்சியான காலநிலை காரணமாகப் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதன் காரணமாக,  நீர்க் கட்டணத்தில் மாற்றம் செய்வதைத் தாமதிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்திருத்திருக்கின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மற்றுமொரு அடிப்படைத் தேவையான மின்சாரத்துக்கான கட்டணம் எந்தத் தருணத்திலும் அதிகரிக்கப்பட மாட்டாது என்று, அதற்குப் பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்