வெளிவிவகார அமைச்சர் பதவியை துறக்கிறார் ரவி; ஏற்கிறார் அமுனுகம

🕔 August 8, 2017

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகவுள்ளார் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், அந்தப் பதவிக்கு கலாநிதி சரத் அமுனுகம நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று, ஐ.தே.கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் தற்போதைய நிலையில் சர்வதேச விவகாரங்களில் அனுபவமுள்ளவரும், ஐ.ம.சு.முன்னணியைச் சேர்ந்தவருமான சரத் அமுனுகமவை வெளிவிவகார அமைச்சராக நியமிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதேவேளை, சரத் அனுமுகம வகிக்கும் அமைச்சுப் பதவியை திலக் மாரப்பனவுக்கு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அரசாங்கத்துக்கு சார்பான பத்திரிகையொன்றின் தகவலின் படி, வெளிவிவகார அமைச்சுப் பதவி, நவீன் திஸாநாயக்கவுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்