மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிங்கள மொழியில் குர்ஆன் அன்பளிப்பு

🕔 July 19, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்புப் பிரதியினை ஸ்ரீலங்கா தௌஹீத்  ஜமாத்தினர் வழங்கி வைத்தனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு இல்லாத்தில் வைத்து, இந்தக் குர்ஆன் பிரதி வழங்கிப்பட்டது.

கடந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களின் போது, அப்போதைய அரசாங்கம் அதற்குத் துணையாக இருந்து மௌனம் காத்தமைதான், அளுத்கம தாக்குதலை இனவாதிகள் மேற்கொள்வதற்குக் காரணமாக அமைந்தது என்பதை இதன்போது, தௌஹீத் ஜமாத் பிரதிநிதிகள் பகிரங்கமாக முன்வைத்து விவாதித்ததுடன், புதிய அரசியல் யாப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளின்போது, முஸ்லிம்களுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை என்பதுடன், இந்த அநீதியை அனைத்து அரசாங்கங்களும் முஸ்லிம்களுக்குச் செய்து வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

அதேவேளை, திருக்குர்ஆன் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் இனவாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும், அவருக்கு தெளிவான விளக்கங்களும் வழங்கப்பட்டன.

குர்ஆன் பிரதியுடன் இஸ்லாமிய நூல்கள், இஸ்லாம் பற்றி மாற்றுமத நண்பர்களின் கேள்விகளுக்கான பதில்கள் அடங்கிய வீடியோ தொகுப்பும் இதன்போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

(தவ்ஹீத் ஜமாத் – ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்