சாரதிக்கு வெறி; குடைசாய்ந்தது வாகனம்

🕔 July 11, 2017

– க. கிஷாந்தன் –

டிப்பர் ரக வாகனமொன்று உமாஓயாவிலிருந்து வெலிமடை நகரத்திற்கு செல்லும் வழியில், வீதியை விட்டு விலகி, பாலத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இன்று செவ்வாய்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தின் சாரதி, மது அருந்தியமையே விபத்து நிழக்வதற்குக் காரணம் என்று பொலிஸார் கூறினர்.

விபத்தினால் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதனால் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிமடை பதுளை பிரதான வீதியில், புகுல்பொல பிரதேச பாலத்தில்  இந்த விபத்து இடம்பெற்றது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்