கிழக்கு ஆளுநராக, முன்னாள் அமைச்சர் ரோஹித நியமனம்; ஊகங்களெல்லாம் பொய்யாகின

🕔 July 4, 2017

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று, பல்வேறு நபர்களின் பெயர்கள் உச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், ரோஹித போகொல்லாகமவுக்கு இந்த இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய ஒஸ்ரின் பெனாண்டோ, ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்பட்டமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 2007ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை, வெளிவிவகார அமைச்சராக ரோஹித போகொல்லாகம பதவி வகித்திருந்தார்.

ஆயினும், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார்.

ஐ.தே.கட்சி மூலம் 2000ஆம் ஆண்டு  பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ரோஹித போகொல்லாகம நாடாளுமன்ற உறுப்பினரானார். ஆயினும், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிட்டார்.

சட்டத்தரணியான ரோஹித போகொல்லாகம 1954ஆம் ஆண்டு பிறந்தவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்