ஜனாதிபதி செயலாளராக ஒஸ்ரின் பெனாண்டோ நியமனம்

🕔 July 1, 2017

னாதிபதி செயலாளராக, கிழக்கு மாகாண சபையின் ஆளுநராகப் பதவி வகிக்கும் ஒஸ்ரின் பெனாண்டோ நியமிக்கப்படவுள்ளார்.

ஜனாதிபதி செயலாளராக பதவி வகித்து வந்த பி.பி. அபேகோன், நேற்று வெள்ளிக்கிழமை தனது பதவியினை ராஜிநாமா செய்திருந்தார்.

ஒஸ்ரின் பெனாண்டோ இலங்கை நிர்வாக சேவை தரத்தையுடையவராவார். இவர் 2001ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு செயலாளராகவும் பதவி வகித்திருந்தார்.

அதற்கு முன்னதாக மாவட்ட அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியிருந்தார். மேலும் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் தபால் மா அதிபராகவும் சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments