சமையல் எரிவாயுக் கசிவினால் ஏற்பட்ட தீயினால், காத்தான்குடியில் வீடு சேதம்

சமயல் எரிவாயு சிலின்டரில் ஏற்பட்ட வாயுக் கசிவின் காரணமாக – தீ பரவியமையினால், காத்தான்குடி 03 ஆம் பிரிவு, பழைய விதானையார் வீதியிலுள்ள வீடு, கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை நண்பகலளவில், குறித்த வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலின்டரிலிருந்து, வாயு கசிந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயினால், வீட்டின் கூரையும், ஓடும் தூக்கி வீசப்பட்டுள்ளதோடு, வீட்டிலிருந்த பொருட்கள் பலவும் எரிந்துள்ளன.
குறித்த நேரத்தில், வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேறியமையினால், எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் – காத்தான்குடி பொலீசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.