குர்ஆனை படிக்க விரும்பிய தம்பர அமில தேரருக்கு, சிங்கள மொழிப் பிரதி வழங்கி வைப்பு

🕔 June 27, 2017

யவர்தனபுர பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், இனவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான தம்பர அமில தேரருக்கு, குர்ஆனின் சிங்கள மொழியாக்க பிரதி நேற்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

பேருவலைப் பகுதிக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அமில தேரர், தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட சிங்கள மொழியிலான அல்குர்ஆன் பிரதி தனக்கு கிடைக்க வில்லை என்றும் அதனை படிப்பதற்கு, தான் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, தேரருக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர்,  தமது மக்கொன, சீனன்கோட்டை கிளை ஊடாக, குர்ஆனின் சிங்கள மொழியாக்க பிரதியினை உடனடியாக வழங்கி வைத்தனர்.

பொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரருக்கு சார்பாக, அண்மையில் அஸ்கிரிய பீடம் விடுத்திருந்த அறிக்கை தொடர்பில், தம்பர அமில தேரர் கண்டனம் தெரிவித்திருருந்தார்.

“அவசியமற்றதும், கூறக்கூடாததுமான கருத்தினை உள்ளடக்கிய ஓர் அறிக்கையினை அஸ்கிரிய பீடம் வெளியிட்டிருக்கிறது” என,  தனது கண்டனத்தில் தெரிவித்திருந்த அமில தேரர், “முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதும், முஸ்லிம் மக்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு, ஞானசார தேரர் கூறும் கருத்துக்களினால் பௌத்த தர்மம் பிரகாசிக்காது” எனவும் கூறியிருந்தாமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்