ஞாசார தேரருக்கு மீண்டும் பிணை

🕔 June 21, 2017

பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஞானசார தேரர் மீதான முறைப்பாடு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்கச் சென்ற தேரரை, வாக்கு மூலம் பெற்ற பின்னர் – ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

இதனையடுத்து இவர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை பிணையில் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று காலை, கோட்டே நீதவான் நீதிமன்றில் சரணடைந்த ஞானசார தேரருக்கு, அந்த நீதிமன்றம் பிணை வங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதுக்கடை நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய ஞானசார தேரர் ஊகங்களுக்கு கருத்து தெரிவிக்காத நிலையில், அவருடன் வந்திருந்த சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் ஊகங்களிடம் பேசினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்