ஞானசாரர் விவகாரத்தில், ஹக்கீமை கொழுவுகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

🕔 June 21, 2017

ஞானசார தேரருக்கு, தான் புகலிடம் வழங்கியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ முற்றாக மறுத்துள்ளார்.

“ஞானசார தேரருக்கு நான் புகலிடம் வழங்குவதாக, சில முஸ்லிம் கடும்போக்காளர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக் குறித்து, நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். தேரருக்கும் எனக்குமிடையில் எந்தத் தொடர்புமில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

“பொதுபல சேனா அமைப்பு 2014ஆம் ஆண்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அளுத்கம பிரதேசத்தில் ஏற்பட்ட மோதல்களின் பின்னர், ஞானசார தேரர், அந்த வருடம் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அப்படியென்றால், அப்போது நீயமைச்சராக இருந்த ரஊப் ஹக்கீம், அந்த நேரம் அவருக்கு புகலிடம் வழங்கினாரா என்று, என்மீது குற்றம் சுமத்துகின்றவர்களிடம் கேட்கிறேன்” என்றார்.

ஞானசார தேரரை கைது செய்ய வேண்டியது, பொலிஸாரின் கடமை எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்