உள்ளூராட்சி தேர்தல் ஒக்டோபரில்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

🕔 June 20, 2017

ள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒக்டோபர் மாதமளவில் நடத்த முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், ஜூலை மாதம் வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளது. எனவே, தேர்தலை  ஒழுங்கு செய்வதற்கு குறைந்தப்பட்சம் 75 நாட்களாவது தேவைப்படும் எனவும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் ஒத்தி வைத்து வருகின்றமை குறித்து, பல்வேறு மட்டங்களிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில், அந்த சபைகளுக்கான தேர்தல்களை டிசம்பர் மாதமளவில் நடத்த முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

எனவே, மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னதாக, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தர்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்