பிளாஸ்ரிக் அரிசி சாத்தியமா; அறிவியல் ரீதியான வீடியோ விளக்கம்

🕔 June 20, 2017

‘பிளாஸ்ரிக் அரிசி’ என்கிற கதை அண்மைக் காலமாக உரத்தும் பரவலாகவும் பேசப்படுகிறது. சமூக வலைத்தளங்கள், இணையங்களிலெல்லாம் பிளாஸ்ரிக் அரிசியினால் சமைக்கப்பட்ட சோறு எனக் காட்டி, அதனை உருண்டை பிடித்து, பந்துபோல் நிலத்தில் அடித்துக் காண்பிக்கும் வீடியோக்களை அடிக்கடி காணக் கிடைக்கிறது.

படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை, பிளாஸ்ரிக் அரிசி என்பதை நம்புகிறார்கள். அது நமது வீட்டுக்கு வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார்கள்.

அண்மையில், சதொச நிலையங்களில் கூட – பிளாஸ்ரிக் அரிசி விற்கப்படுவதாக ஒரு கதை உலவியது. பின்னர், வர்த்தக அமைச்சு மற்றும் சதோச நிறுவனத் தலைவர் என களமிறங்கி, அந்தக் கதை ஒரு வதந்தி என பதிலுக்கு பிரசாரம் மேற்கொள்ள நேரிட்டது.

உண்மையில் பிளாஸ்ரிக் அரிசி என்பது நம்பக் கூடிய கதைதானா? அரிசியை அரசாங்கம் இறக்குமதி செய்யும் போது, அரசியின் தர நிர்ணயம் தொடர்பில் அவதானம் செலுத்தினால், பிளாஸ்ரிக் அரிசி என்பது எப்படி நாட்டுக்குள் புக முடியும்? பிளாஸ்ரிக் என்பது அரிசி போல் வேகுமா? என்பவை உள்ளிட்ட ஏராளமான கேள்விகள் நமக்குள் எழுந்தாலும், பிளாஸ்ரிக் அரிசி எனும் போது, ஒரு வகையான அச்சம் நமக்குள் ஏற்படத்தான் செய்கிறது.

இதற்குக் காரணம், பிளாஸ்ரிக் அரிசி என்பது சாத்தியமா, இல்லையா என்பதை அறிவியல் ரீதியாக பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பெரிதாக மேற்கொள்ளப்படவில்லை. அதனால்தான், பிளாஸ்ரிக் அரிசி தொடர்பில் கண்ட கண்ட பதிவுகளையெல்லாம் மக்கள் நம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது பிளாஸ்ரிக் அரிசி தொடர்பில் அறிவியல் ரீதியாக விளக்கும் ஒரு வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. இதனை முழுமையாக பார்த்து முடிக்கும் போது, ‘பிளாஸ்ரிக் அரிசி’ என்கிற கதை தொடர்பாக நமக்குள் இருந்து வரும் சந்தேகத்துக்கு ஒரு முடிவு கிடைக்கும்.

வீடியோ

Comments