காதலியிடம் அடி வாங்கிய மஹிந்த மகன்; நாமல் முன்னிலையில் நடந்தது

🕔 June 19, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினுடைய மூன்றாவது மகன் ரோஹித ராஜபக்ஷ, தனது புதிய அல்பம் ஒன்றுக்காக, அவருடைய காதலியிடம் அடி வாங்கியுள்ளார்.

தனது காதலி டடியானாவிடம் ரோஹித அடி வாங்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், புகைப்படத்தில் உள்ளவை, ரோஹிதவின் புதிய இசை அல்பத்துக்காக எடுக்கப்பட்ட நடிப்புக் காட்சிகள் எனக் கூறப்படுகிறது.

தம்பி ரோஹித்த, காதலியிடம் அறை வாங்குகின்றமையினை அண்ணன் நாமல் ராஜபக்ஷ பார்த்துக் கொண்டிருப்பது போன்றும், அவற்றில் சில புகைப்படங்கள் உள்ளன.

ரோஹித ராஜபக்ஷ, ஏற்கனவே வீடியோ வடிவில் காட்சிகளமைந்த பாடல் அல்பங்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்