பற்றீஸினுள் தங்க மோதிரம்; மட்டக்களப்பில் இன்று நடந்தது

🕔 June 18, 2017
– பாறுக் ஷிஹான் –

ணவக பேக்கரி ஒன்றிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பற்றீஸ் உணவுப் பண்டத்தினுள் தங்கமோதிரம் ஒன்று கிடைத்த ஆச்சரியமான சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பிலுள்ள உணவக பேக்கரியில்  கொள்வனவு செய்யப்பட்ட  மேற்படி பற்றீஸை வாடிக்கையாளர் உண்பதற்குத் தயாரான போது, அதனுள்  தங்க மோதிரம் ஒன்று இருந்ததை   கண்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த தங்க மோதிரத்தின் உரிமையாளர், உரியபடி நிரூபித்தால்   அதனை வழங்குவேன் என்று, பஸ்றீஸை கொள்வனவு செய்தவர் கூறியுள்ளார்.

அண்மைக்காலமாக உணவகங்களில் கொள்வனவு செய்யப்பட்ட சாப்பாட்டு பண்டங்களினுள் பீடித் துண்டு மற்றும் இரும்பு ஆணி உள்ளிட்ட பல பொருட்கள் காணப்பட்டனை.

இந்த நிலையிலேயே, இன்று ஒருவருக்கு கொஞ்சம் வித்தியாசமாக தங்க மோதிரம் கிடைத்துள்ளது.

Comments