ஞானசார தேரரை விஜேதாஸ ராஜபக்ஷ பாதுகாக்கின்றார் என்றால், ஏன் அவரை விசாரிக்கவில்லை

🕔 June 18, 2017

னவாத பிரச்சினைகள்  தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாகவது;

கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்களை வழங்கிய பொதுபல சேனாவின்இயக்குனர் யார் என்ற வினாவுக்கான பதிலை, இலங்கை சமூகம் அண்மித்து விட்டது

பொதுபலசேனாவின் இயக்குயர் யார் என்பது பற்றிய அலசல்தான், பிரபல பத்திரிகைகளிலும் முக்கியஸ்தர்களின் பேச்சுக்களிலும் பிரதான விடயமாக மாறியுள்ளது.

குற்றம் சாட்டப்படும் ஒவ்வொருவரும், நானெல்ல நீதான் அதனை இயக்கினாய், இயக்குகிறாய் என குற்றம்சாட்டி கொண்டிருக்கின்றனர்இவ்வாறு குற்றம் சாட்டுபவர்கள் அனைவரும் இலங்கை நாட்டின்முக்கியஸ்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காலத்தில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றால் அவரை குற்றம்சுமத்துவதுதான் அனைவரின் வேலையாகவும் இருந்தது. அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டமையினால்தான் பாம்பின்  உண்மையான உறைவிடத்தை மக்கள் அறிந்துகொள்ளச் முடிந்துள்ளது.

இருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ செய்யாத குற்றத்துக்கு, முஸ்லிம் சமூகம்  மிகப் பெரிய தண்டனை வழங்கியுள்ளமையும் இங்கு நினைவுபடுத்தத்தக்கது.

இந்த அரசாங்கத்துக்கு ஞானசார தேரரை கைது செய்வது அவ்வளவு பெரிய விடமல்ல. அவர் அங்குமிங்கும் சுற்றிதிரிந்த போதெல்லாம் விட்டு விட்டு, இப்போது தேடியலைகிறார்கள்அவருடைய விடயத்தில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுதான் அவரை ஹீரோவாக மாற்றி, அவர் பற்றிய செய்திகளை பத்திரிகைளில், கொட்டை எழுத்துக்களில் வரவும் செய்துள்ளது.

இப்போது ஞானசார தேரரை விஜேதாச ராஜபக்‌ஷ பாதுகாக்கிறார் என சிலர் கூறிவருகின்றனர். அப்படிஎன்றால் ஏன் அவரை இதுவரை விசாரிக்கவில்லைஇது தொடர்பில் கருத்து கூறியுள்ள நபரை, பொலிஸார் விசாரணை செய்ய வேண்டும்அவர் கூறுவது உண்மையென்றால், சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அதை விடுத்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் உலவுவதை வேடிக்கை பார்த்தவண்ணம் இருக்கக்கூடாது.

இந்த விடயத்தில் நல்லாட்சியின் செயற்பாடுகளை பார்க்கும் போது,  தங்கள் தேவைகளுக்காக முஸ்லிம்களை வைத்து அரசாங்கம் விளையாடுகிறது என்றுதான் எமக்கு புலனாகிறதுஇல்லையென்றால், பொறுப்பில் இருப்பவர்கள் முன்னுக்கு பின் முரணான கதைகளை சொல்லாமல், பொறுப்புடன் மக்களுக்கு இந்த விடயத்தை தெளிவுபடுத்தியிருப்பார்கள்.

எது எப்படியோ பொதுபல சேனா அமைப்பானது அரசியல் லாபம் கருதியே ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. அதேவேளை, சில அரசியல் சக்திகளின் விளையாட்டுப் பந்தாக முஸ்லிம் சமூகத்தை சிலர் மாற்றியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments