லண்டன் தீ விபத்து; 29 வருட அனுபவத்தில் இப்படியொரு விபத்தை சந்தித்ததில்லை: லண்டன் தீயணைப்பு ஆணையாளர்

🕔 June 14, 2017

பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள குடியிருப்பு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 06 பேர் பலியானதாகவும், 74 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

24 மாடிகளைக் கொண்ட மேற்படி கட்டடத்தில், 120 குடியிருப்புகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை ஏற்பட்ட மேற்படி பாரிய தீயினை அணைப்பதற்கு, 200க்கும் மேற்பட்ட தீயனைப்பு பணியாளர்கள் களமிறங்கியிருந்தனர்.

இதேவேளை, இந்த விபத்தின் போது எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பதை, கூற முடியாமலுள்ளது என்று, மெற்றோ பொலிற்றன் பொலிஸ் தளபதி ஸ்ருவேட் கேன்டி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது 29 வருட சேவைக்கால அனுபவத்தில், இவ்வாறானதொரு பாரியளவான தீ விபத்தினை, தான் சந்தித்தில்லை என்று, லண்டன் தீயணைப்பு ஆணையாளர் டானி கொட்டன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments