வருடக் கடைசியில், புதிய அரசியல் யாப்பு

🕔 June 12, 2017

பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய அரசியல் யாப்பு இவ்வருடம் கடைசியில் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அரசியல் யாப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை, இல்லாமலாக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அரசியல் யாப்பினை அறிமுகம் செய்வதில், அரசாங்கம் தாமதம் காட்டுகின்றமை தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கப்படுகின்ற புதிய அரசியல் யாப்பினை வெளிக் கொண்டு வருவதில் தாமதம் காட்டப்படுவதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த வருடம் கூறியிருந்தது.

கடந்த மாதம் கொழும்பு வந்திருந்த இந்தியப் பிரதமருடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா. சம்பந்தன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், புதிய அரசியல் யாப்பு தாமதிக்கப்படுகின்றமை குறித்து, தனது கவலையினை வெளியிப்படுத்தியிருந்தார்.

Comments