நுகேகொட வியாபார நிலையத்துக்கு தீ வைத்ததாகக் கூறப்படும் நபர் கைது

🕔 June 8, 2017

நுகோகொட பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்துக்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை தீ வைத்ததாகக் கூறப்படும் சந்தேக நபர், கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகிறது.

நேற்று புதன்கிழமை மாலை, இவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் நுகோகொட மற்றும் மகரகம பிரதேசங்களிலுள்ள நான்கு கடைகளுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனக் கூறப்படுகிறது.

நுகோகொடயிலுள்ள வியாபார நிலையத்துக்கு தீ வைக்கும் போது பதிவான சி.சி.ரி.வி. காட்சிகளைக் கொண்டு, இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என அறிய முடிகிறது.

கைதாகியுள்ள மேற்படி நபர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்பான செய்தி: நுகேகொட கடையெரிப்பு சம்பவம்: நாசகாரிகளை கைது செய்யுமாறு, அமைச்சர் சாகலவிடம் றிசாட் வலியுறுத்தல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்