தொடரும் பதவி மாற்றம்: 04 ராஜாங்க அமைச்சர்கள், 03 பிரதியமைச்சர்கள் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம்

🕔 May 31, 2017

ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சிலரின் அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜாங்க அமைச்சர்கள் விபரம்:

வசந்த சேனநாயக – வெளிவிவகார ராஜாங்க அமைச்சர்

எரான் விக்ரமரத்ன – நிதி ராஜாங்க அமைச்சர்

பாலித ரங்கே பண்டார – நீர்ப்பாசன ராஜாங்க அமைச்சர்

லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன – பொது நிறுவனங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர்

பிரதியமைச்சர்கள் விபரம்:

கருணாரத்ன பரணவிதாரண –  திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி

ரஞ்சன் ராமநாயக – சமூக உரிமை, நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை

இவர்கள் இன்று புதன்கிழமை சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர் எனத் தெரியவருகிறது.

Comments