ஹர்தால் இடைநிறுத்தம்; நாளை இல்லை

🕔 May 24, 2017

முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாதத் தாக்குதலைக் கண்டித்து, நாளை வியாழக்கிழமை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஹர்த்தால் இடைநிறுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பினை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாதத் தாக்குதலைக் கண்டித்து, நாளைய தினம் ஹர்த்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பானது, கடந்த காலங்களில் முஸ்லிம்கள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, முஸ்லிம்கள் நாளைய தினம் தமது வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Comments