தொலைக்காட்சி தொகுப்பாளர் கடத்தல்; நிர்வாணமாகப் படம் பிடிக்கப்பட்டு, நகைகளும் கொள்ளை

🕔 May 23, 2017

கொழும்பிலுள்ள பிர­பல தொலைக்­காட்சி ஒன்றின் பெண் நிகழ்ச்சித் தொகுப்­பாளர் ஒருவர், கடத்தப்பட்டு நிர்­வா­ண­மாக்­கப்­பட்ட நிலையில் புகைப்­படம் எடுக்­கப்பட்டதாக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தலின்போது, அந்தக் பெண்ணின் நகைகள் உள்­ளிட்­ட­வையும் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மஹ­ர­கம பொலிஸ் நிலை­யத்தில் இது தொடர்பாக முறைப்­பாடு செய்­யப்­பட்ட நிலையில், மஹ­ர­கம பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி டி.எஸ். மீடின் தலையிலான குழு­வினர் சிறப்பு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

கடந்த வெள்­ளிக்கிழமை இரவு வேளையில் அலு­வ­ல­கத்தில் வேலை­களை முடித்­து விடட்டு, மஹ­ர­கம, அருச்­ச­வல – ரத்­மல்­தெ­னிய பகு­தியில் உள்ள தனது வீட்­டுக்கு, தன்னுடன் பணியாற்றும் ஆண் நிகழ்ச்சித் தாயா­ரிப்­பாளர் ஒரு­வரின் மோட்டார் சைக்கிளில் மேற்படி பெண் சென்­றுள்ளார்.

இந்­நி­லையில் ரத்­மல்­தெ­னிய சந்­திக்கு 500 மீட்டர் தொலைவில் வைத்து திடீ­ரென வெள்ளை வேன் ஒன்றில் வந்­த­வர்கள், பெண் தொகுப்­பா­ள­ரையும் ஆண் தயாரிப்பாளரையும் துப்­பாக்கி முனையில் கடத்­தி­யுள்ளனர்.

இதன் பின்னர் சுமார் அரை மணி நேரத்தில் கடத்தப்பட்டவர்களுடன் ஓர் இடத்தை வேன் அடைந்துள்ளது. அங்கு வீடொன்­றுக்குள் இரு­வரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வேனில் நான்கு கடத்­தல்­கா­ரர்கள் இருந்தனர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

குறித்த வீட்டின் அறை­யொன்றில் அவ்­வி­ரு­வரும் தடுத்து வைக்­கப்பட்ட நிலையில், அங்கு பெண் தொகுப்­பாளரை நிர்­வா­ண­மாக்கிய கடத்தல்காரர்கள் தமது கைய­டக்கத் தொலை­பே­சி­யொன்றில் புகைப்­படம் எடுத்துள்ளனர்.  குறித்த ஆண் தயா­ரிப்­பாளர் முன்­னி­லை­யி­லேயே இது இடம்­பெற்­றுள்­ளது.

இத­னை­ய­டுத்து தொகுப்­பா­ளரின் தொலை­பேசி, காதணி ஜோடி, தங்கச் சங்­கிலி ஆகியவற்றுடன் ­பணப் பையும் பறித்தெடுக்கப்பட்டது.

பின்னர் அவ்­வி­ரு­வ­ரையும் மீண்டும் வேனில் ஏற்றிய கடத்தல்காரர்கள், சனி அதிகாலை கொட்­டாவ – மால­பல்ல ரயில் நிலையம் அருகே, கடத்தியவர்களை இறக்கிவிட்­டு­ தப்பிச் சென்­றுள்­ளனர்.

கடத்­தப்­பட்­ட­வர்கள் பயணம் செய்த தயா­ரிப்­பா­ளரின் மோட்டார் சைக்கிளும் எங்கு உள்­ளது என இது­வரை தெரி­ய­வில்லை. இந்த நிலை­யி­லேயே பாதிக்கப்பட்ட பெண் தொகுப்­பாளர் மஹ­ர­கம பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்