பிரித்தானிய தூதரகத்தில் பறக்கும் ஓரினச் சேர்க்கை கொடி: நாமல் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்

🕔 May 18, 2017

லங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைத்துள்ளதாக  அரசாங்கம் கூறி பெருமைப்பட்டுக் கொண்டுள்ள இந்த தருணத்தில், இலங்கையிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தில் ஓரினசேர்க்கை உரிமைக்கான கொடி ஏற்றப்பட்டுள்ளமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவருடைய ஊடக பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

“இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைத்துள்ளதாக  அரசாங்கம் கூறி பெருமைப்பட்டுக் கொண்டுள்ள இந்த தருணத்தில், கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில்,   அந்த நாட்டு தேசியக்கொடிக்கு அருகில், ஓரின சேர்க்கையாளர்கள் கொடியேற்றப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இலங்கையில் ஓரினசேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கும் பல திட்டங்களுக்கு பிரித்தானிய தூதரககம் உதவியுள்ளதாக தகவல் உள்ளது.

இந்த நிலையில், ஓரினச்சேர்க்கை கொடி ஏற்பட்டமை தொடர்பில் பிரித்தானிய தூதுரகத்தினால் டுவிட்டர் பதிவொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

‘மனித உரிமைகள் உலகளாவியதுசகிப்புத்தன்மை மற்றும் பாகுபாடின்மை ஆகியவற்றினை உலகம் முழுவதும் மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். ஆகக்குறைந்தது ஓரினச் சேர்க்கையாளர்களுக்காகவேனும் என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்தச் செய்தியானது, பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

இலங்கையில் கலாசாரத்தை சீரழிக்கும் ஐரோப்பாவின் இதுபோன்ற கோரிக்கைகளுக்கு, மஹிந்த ராஜபக்‌ஷ  தலைசாய்க்காமல் இருந்தமையினால்தான், ஜீ.எஸ்.பி. பிளஸ் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டடது”.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்