10 மில்லியன் பானையாளர்களுக்கு, 3.8 மில்லியன் எல்.ஈ.டீ. மின் குமிழ்களை வழங்க, அமைச்சரவை அங்கீகாரம்

🕔 May 17, 2017

குறைந்த வருமானமுடைய 3.8 மில்லியன் மின் பாவனையாளர்களுக்கு, 10 மில்லியன் எல்.ஈ.டீ (LED) மின் குமிழ்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று செவ்வாய்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே, அமைச்சர் இதனைக் கூறினார்.

நாட்டிலுள்ள 3.8 மில்லியன் மின் பாவனையாளர்கள், எல்.ஈ.டீ (LED) மின் குமிழ்களை விடவும் 70 வீதம் அதிகமான மின்சாரத்தை பயன்படுத்தும் வழமையான மின்குமிழ்களையே பயன்படுத்துவதாகவும் அமைச்சர் இதன் போது கூறினார்.

வருமானம் குறைந்த மின் பாவனையாளர்களால் அதிக விலையுடைய எல்.ஈ.டீ (LED) மின் குமிழ்களை கொள்வனவு செய்வதற்கு முடியாமலுள்ளது. அதனால்தான் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. பாவனையாளர்களின் தேவையினையும், கோரிக்கையினையும் கருத்திற் கொண்டு அவர்களுக்கு எல்.ஈ.டீ (LED) மின் குமிழ்கள் வழங்கப்படும்.

இவ்வாறு வழங்கப்படும் எல்.ஈ.டீ (LED) மின் குமிழ்களுக்கான பணத்தினை, மின் பாவனையாளர்களின் மின் பட்டியல் மூலமாக 24 மாதங்களில் வசூலிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்