டிபென்டரில் 168 கிலோகிராம் ஹெரோயின் கடத்திய நபர் கைது

🕔 May 11, 2017

சிலாபம் – முத்துப் பந்திய பகுதியில் வைத்து 198 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் இன்று வியாழக்கிழமை காலை கைப்பற்றப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலய புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, இந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, போதைப் பொருளை கடத்த முற்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அதற்காகப் பயன்படுத்தப்பட்ட டிபென்டர் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொழும்பைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகிறது.

முத்து பந்தி தீவிலிருந்து கடல் வழி ஊடாக மேற்படி ஹெரோயினை கடத்திய மேற்படி நபர், அதனை கொழும்புக்கு எடுத்துச் செல்லவிருந்ததாகக் கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் மற்றும் டிபென்டர் வாகனம் ஆகியவை புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கைளிக்கப்பட்டுள்ளதோடு, கைதான நபரும் அங்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்