கட்டணத்தை அதிகரித்து விட்டு, காற்றை அனுப்புகிறார்: ஹக்கீம் மீது நீர்ப் பாவனையாளர்கள் ‘கடுப்பு’

🕔 May 6, 2017

– எம். பர்விஸ் –

புத்தளத்தின் புற நகர் பகுதிகளில் – நீர் வழங்கல் அதிகார சபையினூடாக நீரைப் பெறும் பாவனையாளர்களுக்கு, நீருக்கு பதிலாக வெறும் காற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், குறித்த பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த மூன்று வாரங்களாக மேற்படி பிரதேசங்களிலுள்ள குழாய்களில், நீருக்குப் பதிலாக காற்றை அனுப்பும் மோசமான நிலை நீடிப்பதாகவும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித பயனும் கிட்டவில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றார்கள்.

நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர், மூன்று தடவைக்கு மேல், நீர் கட்டணங்களை அதிகரித்துள்ள போதும், கட்டணங்களுக்குரிய சேவை வழங்காமல், நீருக்குப் பதிலாக காற்றினை அனுப்புகின்றமை குறித்து பெரும் கண்டனங்கள் வெளியிடப்படுகின்றன.

அதேவேளை, தம்மைப்போன்ற வறியவர்களின் அன்றாட வாழ்க்கையில், இவ்வாறான சிரமங்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் பாதிக்கப்பட்ட வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்