பொலிஸாரின் சீருடை நீல நிறமாகிறது; பூஜித் ஜெயசுந்தர தெரிவிப்பு

🕔 April 24, 2017

பொலிஸார் தற்போது அணியும் காக்கி நிற சீருடைக்குப் பதிலாக, கடும் நீல நிலத்திலான சீருடை வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார்.

எல்ல பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

உலகிலுள்ள அதிகமான பொலிஸாரின் சீருடைகள் நீல நிறத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

பொலிஸ் திணைக்களத்தில் மாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்கு தாம் தீர்மானித்ததாகவும், அதற்கிணங்க பொலிஸாரின் சீருடையை கடும் நீல நிறமாக மாற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த மாற்றம் மிக விரைவில் அமுலுக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாற்றமானது, பொலிஸ் திணைக்களத்தினை வேறு திசை நோக்கிக் கொண்டு செல்லுமெனவும் பொலிஸ் மா அதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்