மொழி தெரியவில்லையா, கவலையை விடுங்கள்; 80 மொழிகளில், இனி நீங்கள் பேசலாம்

🕔 April 23, 2017

மொழி என்பது தொடர்பாடலுக்கு மிக முக்கியமானது. சிலருக்கு தமது தாய் மொழி தவிர வேறு மொழிகளில் பரீட்சயமிருப்பதில்லை. வேறு சிலருக்கு ஒன்றிரண்டு மொழிகள் மட்டுமே தெரிந்திருக்கும்.

உலகிலுள்ள மக்களுடன் தொடர்பு கொள்வதென்றால், அவர்களின் மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். ஆகக்குறைந்தது, உலகிலுள்ள பிரதான மொழிகளாவது தெரிந்திருந்தால்தான், ஓரளவு கணிசமான மக்களுடன் தொடல்பாடலை மேற்கொள்ளலாம்.

ஆனால், இவ்வாறு கணிசமான மொழிகளை ஒருவர் தெரிந்து வைத்திருப்பதென்பது சாத்தியமான காரியமல்ல.

இதற்கு தீர்வாக அறிமுகமாகியுள்ளது – ட்ராவிஸ் எனும் மொழிமாற்றிச் சாதனம்.

ட்ராவிஸ் என்பது கையடக்கத் தொலைபேசி போன்று போன்று பொக்கட்டில் அடங்கும் வகையில் சிறிய வடிவில் இருக்கும். நிகழ்நேர முறையில் மொழிமாற்றம் (Real Time Translator ) செய்யக்கூடிய வகையில் ட்ராவிஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் 80 வகையான மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. நம் மொழியில் சொல்லும் வார்த்தையை பிற மொழிகளில் அழகாக மாற்றம் செய்து கொடுக்கும் திறன் உடையது. இதுபற்றி இண்டிகோகோ (Indiegogo) எனும் இணையதள பக்கத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

Comments