இரண்டு கிலோகிராம் ஹெரோயினுடன் நபர் கைது

🕔 March 27, 2017

ஹெரோயின் இரண்டு கிலோகிராமை தன்வசம் வைத்திருந்த ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை வல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடற்படையும், கலால் வரித் திணைக்களத்தினரும் இணைந்து மேற்படி நபரைக் கைது செய்தனர்.

மேற்படி 02 கிலோ ஹெரோயின் போதைப் பொருள், 04 பைகளில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக, இலங்கையில் பெருமளவான ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா ஆகியவை கைப்பற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்